Tuesday 26 February 2013

புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !


புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !

நிறைய விஷயங்களை நாம் அடிக்கடி பேசுவோம். ஆனால் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது ? அதன் தொழில் நுட்ப நுணுக்கங்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது.

புளூடூத் பற்றித் தெரியுமா ? என சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டால் அது ஏதோ பல் சம்பத்தப்பட்ட விஷயம் என நினைத்திருப்போம். அந்த நிலையைத் தாண்டி இப்போது புளூடூத் என்பது என்ன என்பது நமக்குத் தெரியும்.

தெரியும் என்றால், எந்த அளவுக்குத் தெரியும் என்பது கேள்விக்குறிதான். அதான் போன்ல இருக்குமேபாட்டு எல்லாம் ஷேர் பண்ணலாமேஎனுமளவுக்குத் தான் பெரும்பாலானவர்களுடைய புளூடூத் அறிவு இருக்கும். அதில் தப்பில்லை. நமக்கு பயன்பாட்டு அளவிலான அறிவே போதும். இருந்தாலும் இந்தக் கட்டுரையில் புளூடூத் என்றால் என்ன அதன் தொழில் நுட்பங்கள் என்ன என்பதை எளிமையாய் பார்ப்போம்.
பல்லுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, எதுக்காக புளூ டூத் ன்னு பெயரை வெச்சாங்க ? எனும் குழப்பம் பலருக்கும் உண்டு. இந்த பெயருக்கும் பல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வார்த்தை பிலாட்டென்ட் அல்லது பிலாட்டன் எனும் ஸ்கான்டினேவியன் வார்த்தையின் ஆங்கில வடிவம்.

பத்தாம் நூற்றாண்டுகளில் டென்மார்க்கையும், நார்வேயின் சில பகுதிகளையும் ஆண்டு வந்த மன்னன் முதலாம் ஹெரால்ட் பிலாட்டன் கோர்ம்ஸன். ஆங்கிலத்தில் அவரது பெயரை ஹெரால்ட் புளூடூத் கோர்ம்ஸன் என்பார்கள். பிரிந்து கிடந்த நாட்டை ஒன்றாய் சேர்க்கவேண்டுமென முயற்சி எடுத்த மன்னர் அவர் ! அதனால் தான் நமது இணைக்கும் தொழில்நுட்பத்துக்கும்அவருடைய பெயரான புளூடூத் எனும் பெயரை வைத்தார்கள். இதுவே சுருக்கமான பெயர் புராணம் ! புளூடூத் சிம்பலை உற்றுப் பார்த்தால் ஒரு “B” தெரியும். அது அவருடைய கையெழுத்தின் பழங்கால ரூனிக் வடிவம் தான் !
புளூடூத் ஒரு குறுகிய எல்லைக்குள் கம்பியில்லா இணைப்பு மூலம் தகவல்களைப் பரிமாற்றும் முறையே. அது நமக்குத் தெரிந்தது தான். உதாரணமாக அருகருகே இருக்கும் இரண்டு மொபைல் போன்களிலிருந்து பாடலையோ, படத்தையோ பரிமாறிக் கொள்வது இந்த முறை தான். இதற்காக குறைந்த அலைவரிசையுடைய ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக 2400 முதல் 2480 மெகா ஹெட்ஸ் அளவு !

PAN தெரியுமா என்றால், “தெரியுமே. அதன் விரிவாக்கம் பெர்மனன்ட் அக்கவுண்ட் நம்பர். வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது இந்திய அரசின் சட்டம்.என்பீர்கள். நல்லது ! புளூடூத் விஷயத்தின் இன்னொரு PAN உண்டு. அது பெர்சனல் ஏரியா நெட்வர்க் என அழைக்கப்படும். பாதுகாப்பான இந்த குறுகிய நெட்வர்க் தான் தகவல் பரிமாற்றத்தின் ஏரியா.
புளூடூத் ஸ்பெஷல் இன்டரஸ்ட் குரூப் (Bluetooth Special Interest Group ) என்றொரு குழு இருக்கிறது. சுமார் 15000 நிறுவனங்கள் இதில் இணைந்திருக்கின்றன. இந்த குழு தான் புளூடூத் தொடர்பான எல்லா தரம், லைசன்ஸ், சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் நிர்ணயிப்பவர்கள். ஆனால் இவர்கள் புளூடூத் பொருட்களைத் தயாரிப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது !

ஒரு தகவலை அனுப்ப வேண்டுமெனில் முதலில் இரண்டு கருவிகளுக்கு இடையேயான பாதுகாப்பான தொடர்பு உருவாக்கப்படுகிறது. பிறகு அனுப்ப வேண்டிய தகவல் சின்னச் சின்னதாக வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட துண்டுகள் ஒவ்வொன்றாக பரிமாறப்படுகின்றன. இதை பாக்கெட் பேஸ்ட் புரோடோகால் (packet-based protocol) என்கிறார்கள். அதாவது ஒரு தகவலை பாக்கெட் பாக்கெட்டாக வெட்டி வைப்பது.

இதன் பரிமாற்ற முறை மாஸ்டர் ஸ்லேவ் ஸ்ட்ரக்சர் (master-slave structure ) படி இயங்கும். ஒரு மாஸ்டர் தலைவராக இருப்பார். அவரிடமிருந்து பல கருவிகளுக்கு தகவல் பரிமாறப்படும். இவை குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும். இதனால் தகவல் பரிமாற்றத்தில் ஒழுங்கான மற்றும் சீரான இயக்கம் நடைபெறும்.
தகவல் பரிமாற்றத்துக்கான அடிபடை கடிகாரத்தை மாஸ்டர் நிர்ணயிக்கும். ஒவ்வொரு கடிகார இடைவெளியும் 312.5 மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும். இரண்டு இடைவெளிகளுக்கு 625 மைக்ரோ செகன்ட் இப்படி நீளும். ஒன்று இரண்டு மூன்று நான்கு என நீளும் இடைவெளிகளில் இரட்டை எண்இழைகளின் வழியாக மாஸ்டர் தகவல்களை அனுப்பும். ஒற்றை எண்இழைகளின் வழியாக தகவல்களை பெறும். இது தான் அடிப்படை !

பெரும்பாலும் இந்த பகிர்ந்தல் ரவுண்ட் ராபின்முறையில் நடக்கும். ரவுண்ட் ராபின் என்பது எல்லோரையும் கொஞ்சம் கொஞ்சமாய் கவனிப்பது ! சீட்டி குலுக்கிப் போடும் போது ஆளுக்கு ஒன்று போடுவது போல வைத்துக் கொள்ளலாம். இருக்கின்ற நேரத்தையும், இழைகளையும் இணைக்கப்பட்டுள்ள கருவிகளையும் பொறுத்து தகவல்களை பல்லாங்குழி போல ஒவ்வொருவருக்காய் கொடுத்துக் கொண்டே இருப்பது.

இந்த இடைவெளி ரொம்ப ரொம்பச் சின்னது என்பதால் எல்லா கருவிகளும் ஒரே நேரத்தில் தகவல்களைப் பெறுவது போன்ற ஒரு தோற்றம் உருவாகும். ஆனால் உண்மையில் அதற்கிடையே மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும் !

கருவிகளில் இணைக்கப்பட்டுள்ள மலிவான டிரான்ஸீவர் மைக்ரோசிப்கள் இந்த தகவல் பரிமாற்றத்தைச் செய்யும். இதற்கு மிகவும் குறைவான சக்தியே செலவாகும். இதன் பரிமாற்ற எல்லை கிளாஸ் 1, 2, 3 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் வகை 100 மில்லிவாட் சக்தியுடன் சுமார் நூறு மீட்டர் அளவில் செயல்படும். மூன்றாவது கிளாஸ் அமைப்பில் இந்த அளவு வெறும் ஐந்து மீட்டர்கள் எனுமளவிலேயே இருக்கும் !

புளூடூத் இன்றைக்கு பல கருவிகளில் இயங்குவது அறிந்ததே. மொபைல் போன்களின் இதன் பயன்பாடு அதிகம். அதை இன்டர்காம், கார் ஆடியோ போன்றவற்றுடன் இணைக்கும் நுட்பங்களெல்லாம் இன்று இருக்கின்றன. கணினியில் புளூடூத் டெக்னாலஜி மவுஸ், விசைப்பலகை, பிரிண்டர் என பல கருவிகளை இணைக்கிறது !
புளூடூத்துக்கான அடிப்படைக் கட்டமைப்பை 1994ம் ஆண்டு ஸ்வீடனிலுள்ள எரிக்ஸன் நிறுவனத்தின் ஜேப் ஹார்ட்சென் மற்றும் மேட்டிசன் அமைத்தனர். அதன் பின்னர் அது எஸ்.ஐ.ஜி யால் 1998ம் ஆண்டு நெறிப்படுத்தி அறிவித்தனர். அதன் வெர்ஷன் 1.0ல் ஆரம்பித்து இன்றைக்கு அதன் வளர்ந்த வடிவமான 4.0 எனும் நிலையில் இருக்கிறது.

எல்லா டெக்னாலஜிகளையும் போலவே இதுவும் மாறுபடும் என்பது நிச்சயம். இப்போதைக்கு உள்ள நுட்பத்தில் அதிக வேகம், குறைந்த எனர்ஜி செலவு எனுமளவில் அது நிலைபெற்றிருக்கிறது ! அதே போல ஒலி அலைகளை கடத்த A2DP (Advanced Audio Distribution Profile எனும் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

துவக்க காலத்தில் பாதுகாப்பு அம்சங்கள் ரொம்பவே குறைவாய் இருந்தது. இப்போது பாதுகாப்பு விஷயங்களில் பல மடங்கு முன்னேறியிருப்பது கண்கூடு. ஒரு மொபைல் விண்ணப்பம் அனுப்ப, இன்னொரு மொபைல் அதை ஏற்றுக் கொள்ள கடவுச் சொல் பயன்படுத்து முறை இந்த பாதுகாப்பு அம்சங்களில் ஒன்று ! இரண்டு கருவிகள் இப்படி இணைவதை பெயரிங்என்பார்கள், இதை புளூடூத்தின் பாண்டிங்நுட்பம் செயல்படுத்துகிறது.

எஸ்.எஸ்.பி (Secure Simple Pairing ) முறை தான் பரவலாக பயன்படுத்தப்படும் பாதுகாப்பு முறை. இதில் வார்த்தைகள், எண்கள் போன்ற ஏதோ ஒன்று அடையாள எண்ணாகப் பயன்படுத்தப்படும். இந்த வார்த்தையை தயாரிப்பதற்கு ஒரு ஸ்பெஷல் பார்முலா அல்லது அல்காரிதம் பயன்படுத்தப்படுகிறது. அதை இ22 அல்காரிதம் என அழைப்பார்கள்.

புளூடூத் மைக்ரோவேவ் ரேடியோ அலைகளைப் பயன்படுத்துவதால் புளூடூத் போன்ற கருவிகளை காதில் மாட்டித் திரிவது ஆரோக்கியத்துக்குக் கொஞ்சம் கெடுதல் விளைவிக்கும் என்பது பொதுவான ஒரு பாதுகாப்பு எச்சரிக்கை. ரொம்பக் கம்மியான அளவு தான் என ஆதரவாளர்கள் கூறினாலும், உஷாராய் தேவையான நேரம் மட்டுமே அதைப் பயன்படுத்துவது நல்லது!

மொபைலில் இருந்து கணினிக்கு தகவல்களை அனுப்புவது, இன்னொரு மொபைலுக்கு தகவல் அனுப்புவது, விசிடிங் கார்ட் போன்றவற்றை அனுப்புவது, பிரிண்டருக்கு தகவல் அனுப்புவது, டிவி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு சிக்னல்கள் அனுப்பி இயக்குவது என இதன் பயன்பாடு இன்றைக்கு எல்லா இடங்களிலும் உண்டு.

நன்றி : செந்தமிழ் நாடெனும்

Friday 15 February 2013

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி-

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி----
இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும்
ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service - களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம்.
இப்படி நமக்கு Activate
செய்யப்படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர்.Dialer Tune/Caller Tune, Wallpaper, SMS (Joke, Devotional மற்றும் பல) மற்றும் பல இதில் வரும். இம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் நீங்கள் 155223 என்ற
அலைபேசி எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த Service Activate செய்து உள்ளீர்களோ அதை Cancel செய்து விடலாம். இதை அழைக்க கட்டணம் எதுவும் கிடையாது. தவறுதலாக எடுக்கப்பட்டிருந்து நீங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு Complaint செய்தால் உங்கள் பணம் திரும்ப கொடுக்கப்பட்டு விடும். 24 மணி நேரத்திற்கு பின் நீங்கள் Call செய்தால் சர்வீஸ் மட்டும் கான்சல் செய்யப்படும்.
நீங்களாக Activate செய்த
சர்வீஸ்களையும் இதில் Deactivate செய்யலாம். அநேகமாக அனைத்து நிறுவனங்களும்
தற்போது இதை கொண்டு வந்துவிட்டன.

உங்கள் நெட்வொர்க்குக்கும்
இது வந்து விட்டதா என்று அழைத்து பாருங்கள்.

அழைக்க வேண்டிய எண் - 155223

Pls Share .........

Monday 4 February 2013

செல்போன் பற்றி

1.உலகின் வலிமையான போன்:


சொநிம் நிறுவனத்தின் XP3300 போன்தான் உலகிலேயே வலிமையான போன் என்ற கின்னஸ் சாதனையே புரிந்துள்ளது.
84அடி உயரத்திலிருந்து கீழே எறிந்தாலும் இந்தபோனானது உடையாதாம்.


2.உலகின் முதல் மியூசிக் போன்:

சீமென்ஸ் நிறுவனத்தால் 2001ல் வெளியிடப்பட்ட SL45 தான் உலகின் முதல் மியூசிக் போன் என்ற அந்தஸ்த்தை பெறுகிறது.
அப்பொழுதே இந்தபோனானது MP3 தரவுகளையும் சப்போர்ட் செய்யும்வகையில் இருந்தது.

3.SMSல் 160 உருக்கள்:

1985ல், 45 வயதுகள் மதிக்கத்தக்க ஆய்வாளரான பிரீதேல்ம் ஹிலெப்ரண்ட் தான் இந்த SMS களுக்கான எழுத்துருக்களின் அளவுகளை நிர்ணயித்தவர்.
ஒவ்வொரு மெசேஜும் குறிப்பிட்ட அளவுடைய எழுத்துக்களை மட்டுமே கொண்டிருக்கவேண்டுமெனவும், இல்லாவிட்டால் தொழில்நுட்பரீதியான பிரச்சனைகள் ஏற்படுமெனவும் தனது ஆய்வின்மூலம் விளக்கியவரும் இவரே!

4.பிலிப்பைன்ஸ் நாடுதான் உலகிலேயே அதிக SMSகளை அனுப்புபவர்களின் பட்டியலில் முதலிடம் பெறுகிறது. இங்குள்ளவர்களால் ஒவ்வொருநாளும் 14கோடி SMSகள் அனுப்பபடுகின்றன!
ஆரம்பத்தில் SMS சேவையானது இலவசமாகவே இருந்தது. மக்கள் மத்தியில் பிரபலமானவுடன் கட்டணங்கள் நிர்ணயித்துவிட்டார்கள்.

5.உலகின் மிக விலையுயர்ந்த போன்:

ஸ்டோர்ட் ஹுக்ஹெஸ் ஐபோன் 4 தான் உலகிலேயே விலையுயர்ந்த போன் என்ற பெருமையை பெறுகிறது. இதன் விலையானது இந்தியமதிப்பில் சுமார் ரூ.45 கோடிகளாகும்.
இதுவொரு வைரம் பதித்த போனாகும்.

6. முதன்முதலில் மொபைல் வழியாக அனுப்பப்பட்ட போட்டோ:
1997ல் ஜூன் மாதம் 11ம் நாள், பிலிப் கான் என்பரால் தான் முதன்முதலாக மொபைல் வழியாக போட்டோவானது அனுப்பப்பட்டது. இவர்தான் முதல் கேமரா போனை உருவாக்கியவர் என்பது கூடுதல் தகவல்.

7. அதிகம் விற்கப்பட்ட போன்:

யாராலும் எளிதில் மறக்கமுடியாத நோக்கியா 1100 போன் தான் உலகிலேயே அதிகம் விற்பனை செய்யப்பட்ட போன் என்ற பெருமையை பெறுகிறது. இந்த போனானது சுமார் 25 கோடி என்ற அளவில் விற்கபட்டதாம்.
2003ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சாதாரண போன் 2009 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு விற்பனையில் சாதனை படைத்ததென்றால் அது மிகையாகாது.

8. ஜேம்ஸ் பாண்ட் போன்:
ஜேம்ஸ் பாண்ட் 007 முதன்முதலில் பயன்படுத்திய போன் எதுதெரியுமா?. அந்த பெருமையை பெறுவது எரிக்சன் JB988 போனாகும்.
இந்த போனில் பிங்கர் பிரிண்ட் ஸ்கானர், பாதுகாப்பு அமைப்பு மற்றும் பல்வேறு தொழில்நுட்பங்கள் அப்பொழுதே இருந்ததாம்.


9. நோக்கியா விற்ற பேப்பர்கள்:
நோக்கியா நிறுவனம் தொடங்கப்பட்டது 1865ல். அப்பொழுது இந்நிறுவனத்தின் முதன்மை தொழிலானது பேப்பர்கள் உற்பத்திசெய்வதாகும். சில வருடங்களுக்கு பிறகு தனது தொழிலை மாற்றியது இந்நிறுவனம். அதாவது ரப்பர் வகை பொருள்கள் தயாரிப்பது, வயர்கள் தயாரிப்பது மற்றும் பின்லாந்து நாட்டு ராணுவத்திற்கு தகவல்கள் பரிமாற்றக்கருவிகளை விற்றது.
1980களில் தான் நோக்கியா நிறுவனம் மொபைல் போன்கள் தயாரிப்பில் இறங்கியது.

10. செல்போன்களே அதிகம்:
அமெரிக்கா மற்றும் அதுசார்ந்த நாடுகள் லேன்ட்லைன் போன்களை விட, செல்போன்களையே அதிகம் பயன்படுத்துகின்றன.

மிஸ்டு கால் வருதா..?..ஜாக்கிரதை.


+92, #90 இப்படி துவங்கும் எண்களில் இருந்து மிஸ்டு கால் வருதா..?..ஜாக்கிரதை..!!!



உங்கள் செல்போனுக்கு +92, #90 அல்லது #09 என்ற எண்களில் துவங்கும் நம்பரில் இருந்து மிஸ்ட் கால் வந்தால் திருப்பி அழைக்க வேண்டாம் என்று வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சிம் கார்டை குளோன் செய்து அதில் உள்ள விவரங்களைப் பெற விஷமிகள் புதிய யுத்தியை கையாளுகின்றனர். +92, #90 அல்லது #09 என்ற எண்களில் துவங்கும் நம்பரில் இருந்து யார் செல்போனுக்காவது விஷமிகள் மிஸ்ட் கால் கொடுக்கிறார்கள். யாரோ அழைத்துள்ளார்களே என்று நினைத்து அந்த நபரும் அந்த எண்ணை திருப்பி அழைத்தால் சிம் கார்டு குளோன் செய்யப்பட்டு சிம், மெமரி மற்றும் டேட்டா கார்டுகளில் உள்ள விவரங்களை விஷமிகள் எடுத்துவிடுகின்றனர்.

அவ்வாறு அவர்கள் மிஸ்ட் கால் கொடுக்கையில் யாரேனும் போனை எடுத்து பேசிவிட்டால் நாங்கள் கால்சென்டரில் இருந்து பேசுகிறோம். உங்கள் செல்போன் சேவை ஒழுங்காக உள்ளதா என்பதை அறியவே அழைத்தோம் என்று கூறி # 09 அல்லது # 90 என்ற எண்ணை அழுத்தி அவர்களுடைய எண்ணுக்கு அழைக்குமாறு கூறுவார்கள். அவ்வாறு நாம் அழைத்தால் நம் சிம் கார்டை குளோன் செய்து நாம் அதில் வைத்துள்ள எண்களை அழைத்து மோசடி செய்கிறார்கள்.

அதனால் இதுபோன்ற எண்களில் இருந்து மிஸ்ட் கால் வந்தால் திரும்பி அழைக்க வேண்டாம். மேலும் செல்போனில் வங்கி கணக்கு எண், பாஸ்வேர்டு ஆகியவற்றை பதிவு செய்து வைக்க வேண்டாம்.

இதுபோன்று மிஸ்ட் கால் வந்த எண்ணை மீண்டும் அழைத்து சுமார் 1 லட்சம் பேர் ஏமாந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday 19 January 2013

கற்பழிப்பிலிருந்து காப்பாற்ற புதிய மொபைல் அப்ளிகேஷன்


கற்பழிப்பிலிருந்து காப்பாற்ற புதிய மொபைல் அப்ளிகேஷன் 'Me against Rape'

புதுடில்லி பேருந்து பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் காவல் எண் 100க்கு தொலைபேச முயன்றுள்ளார்ஆனால் அதற்க்குள் அவரது கைபேசியை பிடுங்கிவிட்டதால் காவல்துறைக்கு தகவல் கொடுக்க இயலவில்லை.

இந்த புதிய மொபைல் அப்ளிகேஷன் ஒரே ஒரு கிளிக்கில் பல்வேறு விசயங்களை செய்துவிடும்.

1) ஏற்கனவே பதியப்பட்ட செய்தியை குறுந்தகவலாக முன்னரே பதியப்பட்ட எண்ணுக்கு அனுப்பலாம்
2) ஏற்கனவே பதியப்பட்ட குறிப்பிட்ட எண்களை அழைக்கலாம்
3) நடக்கும் உரையாடல்களை பதிவு செய்யலாம்
4) கூகிள் மேப்புடன் இணைக்கப்பட்டு இந்த மொபைல் போன் பயன்படுத்துபவர் சென்ற‌ இடங்களையெல்லாம் பதிவு செய்யலாம்இதனை ஆதாரமாக கொள்ளலாம்.

இதை அனுப் உன்னிகிருஷ்ணன்(24), குணவத் (23) ஜெயேஷ் (23) என்ற மூன்று பேர் உருவாக்கியுள்ளனர்.

இந்த அப்ளிகேசனை இங்கே டவுன்லோட் செய்யலாம்

இந்த அப்ளிகேஷன் அனைவருக்கும் சென்றடைய ஷேர் செய்யுங்கள்பிடிச்சிருந்தா லைக்குங்கள்.

Thursday 29 November 2012

பிளக்ஸிபில் டிஸ்ப்ளே


செல்ஃபோன் என அழைக்கப்படும் கைப்பேசி எவ்வளவு பரிமானத்தில் வந்தாலும் ஸ்க்ரீன் என்ற விஷயம் மட்டும் சதுரமாகத்தான் வருகிறது. காரணம்- டிஸ்ப்ளே எனப்படும் எல் சி டி தான் காரணம். இதை பத்து வருடங்களுக்கு மேல் ரிசர்ச் செய்யும் சோனி, சாம்சங், தோஷிபா போன்றவர்கள் எப்படியாவது ஃபிலக்ஸிபிள் டிஸ்ப்லே அதாவது சதுரத்திற்க்கு பதிலாக மடக்க அல்லது சுருட்டி வைக்க கூடிய டிஸ்ப்லேக்களை ஆராய்ச்சி அளவில் தான் சோதனை செய்யபட்டிருந்தாலும் 2011 ஆம் ஆண்டு சாம்சங் நாங்கள் இந்த வருடத்தில் பிளக்ஸிபல் டிஸ்ப்லே கொன்டு வருவோம் என கூறி ஒரு வருடம் கழித்து இப்போது தான் புரோட்டோ டைப்பை ரெடி செய்திருக்கின்றனர்.

அதுதான் இந்த படத்தில் உள்ள பிளக்ஸிபில் டிஸ்ப்ளே, கண்ணாடிக்கு பதிலாக பிளாஸ்டிக்கில் செய்திருக்கின்றனர், இது அமோஎலீடி வகையை சார்ந்தது. இது வந்தால் ஃபோனை சுருட்டி வைக்க முடியும். டிஸ்ப்ளே உடையும் அபாயம் இல்லை. அது போக விலை குறையும் மற்றும் வாட்டர் ஃப்ரூப் செய்ய இயலும்.இதை வெற்றி கரமாக ஹாங்காங்கில் லான்ச் செய்யபட்டிருக்கிறது இந்தியாவுக்கு 2013ல் கிடைக்கும். இதன் வீடியோ இங்கிருக்கிறது.

VIDEO Link – http://live.wsj.com/video/samsung-flexible-smartphone-screens/66C98C21-8960-4247-854C-F3E188BB50E8.html#!CE36E9F8-537E-45BD-AC7E-01D39498BFE5

Samsung Bendable Screens entering mass production lines. The Samsung Display Co., the display unit of the company is now on the final phase of development of these flexible displays and though there is no release date announcement just yet, we may expect to see these phones hit the showcases right the first half of next year. More interestingly, Samsung has decided to make use of plastic instead of glass to produce these OLED displays, thus rendering them unbreakable. Famous for its AMOLED screens, Samsung made a choice of OLEDs here again instead of Plasma or LCD because they can be made flexible and transparent. Sony, the other popular smartphone manufacturer says it has been doing research on flexible displays for almost a decade now, but they still don’t seem to have any plans of commercializing their technology.

VIDEO Link – http://live.wsj.com/video/samsung-flexible-smartphone-screens/66C98C21-8960-4247-854C-F3E188BB50E8.html#!CE36E9F8-537E-45BD-AC7E-01D39498BFE5


நன்றி : ஆந்தை ரிப்போர்ட்டர்
செல்ஃபோன் என அழைக்கப்படும் கைப்பேசி எவ்வளவு பரிமானத்தில் வந்தாலும் ஸ்க்ரீன் என்ற விஷயம் மட்டும் சதுரமாகத்தான் வருகிறது. காரணம்- டிஸ்ப்ளே எனப்படும் எல் சி டி தான் காரணம். இதை பத்து வருடங்களுக்கு மேல் ரிசர்ச் செய்யும் சோனி, சாம்சங், தோஷிபா போன்றவர்கள் எப்படியாவது ஃபிலக்ஸிபிள் டிஸ்ப்லே அதாவது சதுரத்திற்க்கு பதிலாக மடக்க அல்லது சுருட்டி வைக்க கூடிய டிஸ்ப்லேக்களை ஆராய்ச்சி அளவில் தான் சோதனை செய்யபட்டிருந்தாலும் 2011 ஆம் ஆண்டு சாம்சங் நாங்கள் இந்த வருடத்தில் பிளக்ஸிபல் டிஸ்ப்லே கொன்டு வருவோம் என கூறி ஒரு வருடம் கழித்து இப்போது தான் புரோட்டோ டைப்பை ரெடி செய்திருக்கின்றனர்.

அதுதான் இந்த படத்தில் உள்ள பிளக்ஸிபில் டிஸ்ப்ளே, கண்ணாடிக்கு பதிலாக பிளாஸ்டிக்கில் செய்திருக்கின்றனர், இது அமோஎலீடி வகையை சார்ந்தது. இது வந்தால் ஃபோனை சுருட்டி வைக்க முடியும். டிஸ்ப்ளே உடையும் அபாயம் இல்லை. அது போக விலை குறையும் மற்றும் வாட்டர் ஃப்ரூப் செய்ய இயலும்.இதை வெற்றி கரமாக ஹாங்காங்கில் லான்ச் செய்யபட்டிருக்கிறது இந்தியாவுக்கு 2013ல் கிடைக்கும். இதன் வீடியோ இங்கிருக்கிறது. 

VIDEO Link – http://live.wsj.com/video/samsung-flexible-smartphone-screens/66C98C21-8960-4247-854C-F3E188BB50E8.html#!CE36E9F8-537E-45BD-AC7E-01D39498BFE5

Samsung Bendable Screens entering mass production lines. The Samsung Display Co., the display unit of the company is now on the final phase of development of these flexible displays and though there is no release date announcement just yet, we may expect to see these phones hit the showcases right the first half of next year. More interestingly, Samsung has decided to make use of plastic instead of glass to produce these OLED displays, thus rendering them unbreakable. Famous for its AMOLED screens, Samsung made a choice of OLEDs here again instead of Plasma or LCD because they can be made flexible and transparent. Sony, the other popular smartphone manufacturer says it has been doing research on flexible displays for almost a decade now, but they still don’t seem to have any plans of commercializing their technology. 

VIDEO Link – http://live.wsj.com/video/samsung-flexible-smartphone-screens/66C98C21-8960-4247-854C-F3E188BB50E8.html#!CE36E9F8-537E-45BD-AC7E-01D39498BFE5


நன்றி : ஆந்தை ரிப்போர்ட்டர்

Sunday 25 November 2012

FREE RECHARGE FOR ALL MOBILE


FREE RECHARGE FOR ALL MOBILE

Instructions:


1.So first Just Click on This Link and you will be directed to a page.

2.In the right side you can see that there are a form just fill it up and click on sign up.

3.Now Verify your Mobile Number and E-Mail ID it is very important to get recharge so don't forget to verify mobile number and e-mail both compulsory.

4.Now copy your refferal link which is on the top of the page when you will be logged in.

5.And send that refferal link to two friends on Facebook or E-mail as you like when your friends will click on that link and sign up you will be payed Rs. 2 and your account will reach Rs. 20.

6.As your account have reached Rs. 20 You can now recharge by logging in again on the same website.